Friday, March 16, 2007

எனக்கானவள்.....

வாழ்க்கை என்பதன் அடையாளம்..
சந்தோசத்தின் பரிமாணங்கள்
சக துக்கங்களின் அனுபவங்கள்..

மூங்கில் இசையாய்..
கட்டுக்குள் வெளிப்படும்
கவிதை மொழிகள்...

முடிவறியா பயணமிது...
துணை வருவோர் எத்தனை பேர்..
தோள்கொடுப்போர் எத்தனை பேர்..

பருவம் தந்ததில்
என்னின் பாதியானாய்..
உடம்பில் பாதியானதால்..
உயிரில் கலந்தாய்...
எனக்கோர்.. உயிரையும் தந்தாய்....!

வாழ்வோடு வந்ததால்..
என் வாழ்வின் அர்த்தம் சொன்னாய்..
விதியின் வழியே சிறைபட்ட போதெல்லாம்..
என்னை மீட்டுக் கொடுத்தாய்...

மேகமாய் நான் நிற்க..
தென்றலாய், புயலாய்..விளையாடினாய்.......

அணைப்பில் ஆயிரம் வார்த்தைகள்
சொன்ன போது..
மெளனமாய் இருந்தாய்..
நான் உன்னை மறந்த வேளையில்..
மெளனமாய் ஆயிரம் வார்த்தைகள் சொன்னாய்..

நட்பு...

கனவு காண வேண்டும்.......
கண்கள் மூடி.. கனவு காண வேண்டும்..
வியர்வை நாற்றம் மறந்து..
இன்றைய தோல்விகளின்
தழும்புகளை மறக்க
.....கனவு காண வேண்டும்..
நாளைய பொழுதின்
நம்பிக்கைகளில் பூத்தது இந்த நட்பு...
கவிதையாய் பிறந்து..
தோழமையாய் பரிமாறுகிறது...

நல்லவைகள் நடப்பதில்லை..
உணரப் படுகின்றன...இந்த நட்பைப் போல.......

தோழி...

தென்றல் சுமந்துவரும் இனிமை..
சிதறும் வார்த்தை எங்கும் பூமணம்..
அன்புடன் அழைப்பதில்.. தோழமை..
எனை இங்கு தூண்டும் கவிதை..

நினது மொழிக்கு சரணம் கட்டும்....
சுரம் சேர்த்து..
இனிமை சொல்லி
இனிதே மகிழ்விக்கும்..
கவிதை கேட்கும் பெண்ணே...
கவிதைக்கு கவிதை அழகு சேர்க்குமா....

கதையாய்..

நிஜம் என்கிற வேள்வியில்
தினம் நெய் ஊற்றி
என்னை உயிர்பிக்கும் நண்பர்கள்....
நேற்றாகி விடுகிறார்கள்...

மொழிகள் மறந்து
முகம் தொலைத்து...நினைவிலேயே...
கதைகளாகி விடுகிறர்கள்...!!!!!!

கண்கள் பார்க்காத உருவம்.....
ஆனாலும்.. தினம் தினம் சுகம் காண்கிறது...


விடியலில் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அர்த்தத்துடன் தோன்ற..
மனிதர்கள் என்னவோ மாறத வார்த்தைகளுடன்..
நான் என்று இல்லாமல் நாம் என்று மாறும்
நல்லுலகம் படைத்திட
மானுடம் பேசுவோம்... வாரீர்.

ஆசையாகத்தானிருக்கிறது...

ஆசையாகத்தானிருக்கிறது...

விடியல் என்னை வியர்க்க வைக்கும் வரை..

விதவிதமாய்

உன்னை எண்ணிப் பார்க்க

ஆசையாகத்தானிருக்கிறது...


இருளும் தனிமையும்

என்னை உன்னோடு உற்சாகப்படுத்த...

உதவிடும்உணர்வுகளோடு கழியும்பொழுதுகளை யெண்ண... ஆசையாகத்தானிருக்கிறது...


உன்னோடு நான்

உன் நினைவுகளோடு..

நான் என தங்கிவிட்ட வாழ்க்கை....ஆசையாகத்தானிருக்கிறது...!!!!