Friday, December 14, 2007


நான் என்று யாரைச் சொல்ல.....!

கைபிடித்து நடைபழக்கி
நல்பண்புகளாய்...
தன்னோடு வளர்த்த
தந்தையைச் சொல்லவா...

முதலாய் தெரிந்த
உருவமாய்.. தன்னைக்
கொடுத்து ஆளாக்கிய
அன்னையை சொல்லவா...

கூடி நின்றால்...
கோடி நன்மை என
தோழோடு நிற்க்கும் நண்பர்களைச் சொல்லவா...

என்னுள் நுழைந்து..
என்னை இயக்கும் உன்னை சொல்லவா..
இங்கு நான் என்பதே தவறோ....!
எனக்கென்று பிறந்தவளோ..
என்னை ஆட்க் கொண்டவளே...
திசைகளற்று திரிந்த
கண்களை திருப்பி..
திலகமிட வைத்தாய்..
வைத்த நாள் முதல்
உன்னிடம் வைத்த கண்ணை
நீங்காமல் பார்த்து கொண்டாய்..!
உனது கோபம்
உனது சந்தோசம்
உனது அன்பு..
என்னை ஆட்சி செய்கிறதே...

ஒவ்வொரு நொடியும் உனை விட்டு விலகிடவே நினைக்கிறேன்..
நான் நானாக இருக்க...

இன்று.. இக்கணம் வரை முடியவில்லை...
இந்த போராட்டம் எதுவரை..!
கூடுகள் தேடி
அலையும் மனது...
ஒவ்வொரு உயிரிலும்
ஒவ்வொரு அடையாளம்..
தெடும் பொழுதுகள்..
நீண்ட நெடிய பயணம்..
கிடைத்தால் சந்தோஷம்..
அதுவெ நட்பாய்...
தோழமையாய்...
நீங்களாய்..
உங்களின் நட்பிற்க்கு.. என்னின் வணக்கம்..பரிணாமங்களாய்..
இரவின் தனிமை..
வெளிச்சமாய் வானம்..
சிதறிக்கிடக்கும் வார்த்தைகள்
.... அள்ளத்தெரியாத.. மனசு..
நட்சத்திரங்களை நம்பி
அலைபாயுது.. வெகுளியாய்...!
வெளிச்சப் பூக்களோடு வரும்..
விடியலின் அருமை தெரியாமல்...

நானாய் இருக்கிறேன்

வருட முழுக்க பேசினாய்...
வகிடு கூந்தலை வருடினாய்..
துக்கத்தில் சுமைதாங்கியானாய்..
இப்படி உன்னை சொல்ல என்னிடம்
எதுவுமில்லை..!
என்றாவது ஒரு நாள் நீ
வருவாயென காத்திருக்கிறேன்..
அப்பா, அம்மா, அண்ணா என
அன்பாய் உள்ள இந்த கூட்டை
கலைக்க வருவாய் நிச்சயம்..
அழுகையும் கண்ணீருமாய் வழியனுப்ப..
காத்திருக்கும் கூட்டம் ..
இவர்களின் கண்ணீர் பிரிதல். சந்தோசமாய் !
இத்தனை வருட வழ்க்கையை தொலைத்து விட்டு
உன்னொடு உறவாட
உருவாக்கப்படு காத்திருக்கிறேன்...
எந்த எதிர்பார்ப்பும் இன்றி...
எதை எதை கேட்க போகிறாயோ
இதில் நான் என்ன பொருட்டு..
இருக்கும் வரை இயல்பாய்
நானாய் இருக்கிறேன் என்னொடு.. என்றும் வாழும் கனவுகளொடு..!