Thursday, March 15, 2007

ஊடல்.....

வார்த்தை வேள்விதனில்சுட்ட மனது...
உனது முகம் சுமக்கும் ...
மெளனம்என்னை இன்னும் காயப்படுத்துதே.....

நிஜமறந்தவேளை....
உன் நினைவு தூங்கிய பொழுது...
வார்த்தைகள் சண்டையிட்டு கொண்டன..
ஆனாலும்..
சொன்ன வார்த்தைகள் தவிர்த்து
சொல்லும் வார்த்தை கேள் .. பெண்ணே....

உறைந்து நிற்க்கும் என்னை...
உன் மெளனம் கலைத்து... உயிர்ப்பிப்பாய்..
பொழுதுகள் கரைய...
பொய்மைகள் உறைக்க
நிஜங்களை.. நிழலுக்குள்...ஏன் மறைக்கிறோம்....

வெளியில் வருவாய்..
வெளிச்சம் பெறுவாய்......

உணர்வுகளொடு.. ஊமையாக தவிக்கிறேன்.. நான்...!!

நீ....

உன் வார்த்தைகளில்..
என் சுவாசம் ...
உன் மெளனத்தில்என் கனவுகள்...
உன் பதிலில்என் வெளிச்சம்.....
இவை.. எல்லாமெ..
உன்னைக் காணும் வரை...
பின்.. நானக நீயானய்... !

இன்றும்...

விடியாத இரவு...
வெளிச்சம் நோக்கி கத்தும் சேவல்...
பால் காரனின் மணியோசை...
பக்கத்து வீட்டு பெண்ணின்..
வாசல் தண்ணீர் தெளிக்கும் சத்தம்...
பலபலவென..
கண்கள் திறக்க....
இன்றின் சுமை..நரம்பு முறுக்கேற...
புத்தி சுழலுகிறது
எத்தனையோ மனிதர்கள்...
ஆனாலும்.. நண்பர்களாய்... சிலர்..
இன்றைய பொழுதை... நினைவுகளில் எழுத.... !

Natbu

கனவுகள் என்னை கலைக்கும் வரை..
விடியல் என் உலகிற்க்கு வர்ணம் பூசும் வரை...
தென்றல் என் மேனி தொட்டு.. சிலிர்க்க வைக்கும் வரை..

பனித் துளி என்னைப் பார்த்து.. பல வண்ணமாய் சிரிக்கும் வரை..
....
இரவின் தனிமையில்.. நான் சுவாசிக்க..
நினைவுகளாய்... நண்பர்கள்.....