Thursday, March 15, 2007

இன்றும்...

விடியாத இரவு...
வெளிச்சம் நோக்கி கத்தும் சேவல்...
பால் காரனின் மணியோசை...
பக்கத்து வீட்டு பெண்ணின்..
வாசல் தண்ணீர் தெளிக்கும் சத்தம்...
பலபலவென..
கண்கள் திறக்க....
இன்றின் சுமை..நரம்பு முறுக்கேற...
புத்தி சுழலுகிறது
எத்தனையோ மனிதர்கள்...
ஆனாலும்.. நண்பர்களாய்... சிலர்..
இன்றைய பொழுதை... நினைவுகளில் எழுத.... !

No comments: