கனவுகளாய்..மழை
மெளனமாய் மலர்கள்..
கூட்டுக்குள் குழந்தைகள்..
அவர்களைக் காணாமல்
சோகமாய் பள்ளிக்கூடம் ..!
தெருவெல்லாம்
கருப்புத் தொப்பிகளுடன் தலைகள்..
அங்கொன்று இங்கொன்றாய் காகஙகள்..
மரத்தடியில் ஒட்டிநின்று
காத்திருக்கும் நாய்கள்..
மின்விசிறிக்கு ஓய்வுகொடுத்த குளிர்..
விரைந்து செல்லும் வாகனத்தில்
வீசியெறியும் மழைத் தண்ணீர்..
இப்படியாக ...எனது காலை.. இன்றாய் விடிய..
எனினும் இயல்பாய் எப்பொதும்போல்
வணக்கம் ....!
- பொன்னியின் செல்வன்
Wednesday, December 19, 2007
Subscribe to:
Comments (Atom)