காத்திருக்கிறேன்......!
மௌனத்தின் சப்தங்களில்
உன்ன்னுடன் பேசவே.. காத்திருக்கிறேன்.. !
ஆயிரமாயிர விஷயங்கள்
பேசிஎன்ன ...
நீ.. சொல்லாத..
நான் கேட்காத
வார்த்தைகள் இரண்டு பேருக்குள்ளும் ....
மௌனமாய் ....!
வெளிச்ச கீற்றுக்குள் .. எத்தனையோ
பதிவுகள்..
ஆனாலும், உன்னின் நொடிபொழுது
பார்வை தேடியே
காத்திருக்கிறேன்....!
நீ.. எபோதுமே உன் வேலையில்
நான் மட்டும்
எல்லா வேலைகளும்
தவிர்த்து..
காத்திருக்கிறேன்..!
எங்கும் எதிலும்
உன்னின் ஆக்கிரமிப்பு..
என் நினைவுகளின்
'ஸ்பான்சர் ' நீதானா..?
யாருமற்று நீயும்
நானும் தனித்திருக்கும்
பொழுதிர்க்காக
காத்திருக்கிறேன்..!
எனக்கும் தெரியும்..
அந்த பொழுதில்
அடுத்த வார்த்தையின்றி
தவிப்பேன்.. புத்தியோடு..
ஆகையால்..
மௌனத்தின் சப்தங்களில்
உன்ன்னுடன் பேசவே.. காத்திருக்கிறேன்.. !
Friday, June 13, 2008
Tuesday, January 29, 2008
நீ..
என்னுள் எப்போதும்
நினைவுகளாய்
இயங்கி கொண்டிருப்பது...!
நான்...
உன்னின் நினைவுகளை
ஓயாமல் சுமந்து
நீருற்றி..
விருட்சமாய்..
விரியவைத்திருப்பது...!
நம் நட்பு ....
புத்திகள் மறந்து..
தூங்கும் வேளையிலும்..
கனவுகளாய் ..
கலையாதிருப்பது .....
இதில் இந்த காலை வணக்கம்
என்ன சொல்லும்...
ஆனாலும் ,
உன்னின்
பரிச்சயம்..
ஒவ்வொரு நாளும்
இந்த காலை வணக்கத்தில் தானே..
புதிப்பிக்கப் படுகிறது..
ஆயின்,
இனிய காலை வணக்கம்
என்றும் போல் இன்றும்.. இனிதாய்..!
என்னுள் எப்போதும்
நினைவுகளாய்
இயங்கி கொண்டிருப்பது...!
நான்...
உன்னின் நினைவுகளை
ஓயாமல் சுமந்து
நீருற்றி..
விருட்சமாய்..
விரியவைத்திருப்பது...!
நம் நட்பு ....
புத்திகள் மறந்து..
தூங்கும் வேளையிலும்..
கனவுகளாய் ..
கலையாதிருப்பது .....
இதில் இந்த காலை வணக்கம்
என்ன சொல்லும்...
ஆனாலும் ,
உன்னின்
பரிச்சயம்..
ஒவ்வொரு நாளும்
இந்த காலை வணக்கத்தில் தானே..
புதிப்பிக்கப் படுகிறது..
ஆயின்,
இனிய காலை வணக்கம்
என்றும் போல் இன்றும்.. இனிதாய்..!
Saturday, December 22, 2007
நட்பின் புரிதலை
உணர்ந்ததால் சொல்கிறேன்..சில..
'வெளி' உலகின் கூட்டத்தில்
உன்னின் சந்திப்பு ..
குறிப்பிடும்படியில்லை..
பேசிய வார்த்தைகள் எல்லாமே..
வெகுசாதாரனம் ..
நினைவில் கூட இல்லை..!
பர்க்காத பொழுதில்கூட
உன்னை நினைத்ததாய்..
சொல்வதிற்க்கில்லை..
ஆனலும் எதன் பொருட்டாவது..
நமது சந்திப்பு நிகழ்ந்தது..!
இதுதான் என முன்மொழிந்து
பேசவில்லை இயல்பாய்
வார்த்தைகள் விழுந்து
முகவரியை தேடிக் கொண்டன..
நாட்கள், மாதங்கள் நினைவாகிப் போனலும்..
சந்திக்கும் வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை..
இதுவரை.... !
ஆனாலும்..
உனது கண்களாலும்,
வார்த்தைகளாலும் காயம்பட்டதில்லை..நான்!
இதைவிட என்ன வேண்டும்... நமது நட்பைச் சொல்ல.....!
உணர்ந்ததால் சொல்கிறேன்..சில..
'வெளி' உலகின் கூட்டத்தில்
உன்னின் சந்திப்பு ..
குறிப்பிடும்படியில்லை..
பேசிய வார்த்தைகள் எல்லாமே..
வெகுசாதாரனம் ..
நினைவில் கூட இல்லை..!
பர்க்காத பொழுதில்கூட
உன்னை நினைத்ததாய்..
சொல்வதிற்க்கில்லை..
ஆனலும் எதன் பொருட்டாவது..
நமது சந்திப்பு நிகழ்ந்தது..!
இதுதான் என முன்மொழிந்து
பேசவில்லை இயல்பாய்
வார்த்தைகள் விழுந்து
முகவரியை தேடிக் கொண்டன..
நாட்கள், மாதங்கள் நினைவாகிப் போனலும்..
சந்திக்கும் வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை..
இதுவரை.... !
ஆனாலும்..
உனது கண்களாலும்,
வார்த்தைகளாலும் காயம்பட்டதில்லை..நான்!
இதைவிட என்ன வேண்டும்... நமது நட்பைச் சொல்ல.....!
Wednesday, December 19, 2007
கனவுகளாய்..மழை
மெளனமாய் மலர்கள்..
கூட்டுக்குள் குழந்தைகள்..
அவர்களைக் காணாமல்
சோகமாய் பள்ளிக்கூடம் ..!
தெருவெல்லாம்
கருப்புத் தொப்பிகளுடன் தலைகள்..
அங்கொன்று இங்கொன்றாய் காகஙகள்..
மரத்தடியில் ஒட்டிநின்று
காத்திருக்கும் நாய்கள்..
மின்விசிறிக்கு ஓய்வுகொடுத்த குளிர்..
விரைந்து செல்லும் வாகனத்தில்
வீசியெறியும் மழைத் தண்ணீர்..
இப்படியாக ...எனது காலை.. இன்றாய் விடிய..
எனினும் இயல்பாய் எப்பொதும்போல்
வணக்கம் ....!
- பொன்னியின் செல்வன்
மெளனமாய் மலர்கள்..
கூட்டுக்குள் குழந்தைகள்..
அவர்களைக் காணாமல்
சோகமாய் பள்ளிக்கூடம் ..!
தெருவெல்லாம்
கருப்புத் தொப்பிகளுடன் தலைகள்..
அங்கொன்று இங்கொன்றாய் காகஙகள்..
மரத்தடியில் ஒட்டிநின்று
காத்திருக்கும் நாய்கள்..
மின்விசிறிக்கு ஓய்வுகொடுத்த குளிர்..
விரைந்து செல்லும் வாகனத்தில்
வீசியெறியும் மழைத் தண்ணீர்..
இப்படியாக ...எனது காலை.. இன்றாய் விடிய..
எனினும் இயல்பாய் எப்பொதும்போல்
வணக்கம் ....!
- பொன்னியின் செல்வன்
Tuesday, December 18, 2007

ஆயிரமாயிரம் வார்த்தைகள் சொல்லி..
அலங்கரித்த பொழுதில்
ஒருவரை ஒருவர் கை கோர்த்தோம்..
பூக்களின் வாசனையை
நுகர்ந்த வேகத்தில்
எதிர்பார்ப்புகளின் கெள்விக்குறி..
இருவரின் இடையில்...
நீ, நான் என தினம் போட்டியிட்டு
இருளின் கொடுமையில்
உறவுகளைப் புதிப்பித்து கொள்கிறோம்...
வியப்பாகவேயுள்ளது..
விடியும் பொழுது..
எத்தனை நாட்களுக்கு என.. ?
எது இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
இருவருக்குள்ளும்.. எப்போதோ
உண்மையாய் பறிமாறிக்கொண்ட..
அன்பின் ஈரம் இன்னும் மிச்சமிருக்கோ..
இருவருக்குள்ளும்...!
Friday, December 14, 2007

நான் என்று யாரைச் சொல்ல.....!
கைபிடித்து நடைபழக்கி
நல்பண்புகளாய்...
தன்னோடு வளர்த்த
தந்தையைச் சொல்லவா...
முதலாய் தெரிந்த
உருவமாய்.. தன்னைக்
கொடுத்து ஆளாக்கிய
அன்னையை சொல்லவா...
கூடி நின்றால்...
கோடி நன்மை என
தோழோடு நிற்க்கும் நண்பர்களைச் சொல்லவா...
என்னுள் நுழைந்து..
என்னை இயக்கும் உன்னை சொல்லவா..
இங்கு நான் என்பதே தவறோ....!
எனக்கென்று பிறந்தவளோ..
என்னை ஆட்க் கொண்டவளே...
திசைகளற்று திரிந்த
கண்களை திருப்பி..
திலகமிட வைத்தாய்..
வைத்த நாள் முதல்
உன்னிடம் வைத்த கண்ணை
நீங்காமல் பார்த்து கொண்டாய்..!
உனது கோபம்
உனது சந்தோசம்
உனது அன்பு..
என்னை ஆட்சி செய்கிறதே...
ஒவ்வொரு நொடியும் உனை விட்டு விலகிடவே நினைக்கிறேன்..
நான் நானாக இருக்க...
இன்று.. இக்கணம் வரை முடியவில்லை...
இந்த போராட்டம் எதுவரை..!
என்னை ஆட்க் கொண்டவளே...
திசைகளற்று திரிந்த
கண்களை திருப்பி..
திலகமிட வைத்தாய்..
வைத்த நாள் முதல்
உன்னிடம் வைத்த கண்ணை
நீங்காமல் பார்த்து கொண்டாய்..!
உனது கோபம்
உனது சந்தோசம்
உனது அன்பு..
என்னை ஆட்சி செய்கிறதே...
ஒவ்வொரு நொடியும் உனை விட்டு விலகிடவே நினைக்கிறேன்..
நான் நானாக இருக்க...
இன்று.. இக்கணம் வரை முடியவில்லை...
இந்த போராட்டம் எதுவரை..!
நானாய் இருக்கிறேன்
வருட முழுக்க பேசினாய்...
வகிடு கூந்தலை வருடினாய்..
துக்கத்தில் சுமைதாங்கியானாய்..
இப்படி உன்னை சொல்ல என்னிடம்
எதுவுமில்லை..!
என்றாவது ஒரு நாள் நீ
வருவாயென காத்திருக்கிறேன்..
அப்பா, அம்மா, அண்ணா என
அன்பாய் உள்ள இந்த கூட்டை
கலைக்க வருவாய் நிச்சயம்..
அழுகையும் கண்ணீருமாய் வழியனுப்ப..
காத்திருக்கும் கூட்டம் ..
இவர்களின் கண்ணீர் பிரிதல். சந்தோசமாய் !
இத்தனை வருட வழ்க்கையை தொலைத்து விட்டு
உன்னொடு உறவாட
உருவாக்கப்படு காத்திருக்கிறேன்...
எந்த எதிர்பார்ப்பும் இன்றி...
எதை எதை கேட்க போகிறாயோ
இதில் நான் என்ன பொருட்டு..
இருக்கும் வரை இயல்பாய்
நானாய் இருக்கிறேன் என்னொடு.. என்றும் வாழும் கனவுகளொடு..!
வகிடு கூந்தலை வருடினாய்..
துக்கத்தில் சுமைதாங்கியானாய்..
இப்படி உன்னை சொல்ல என்னிடம்
எதுவுமில்லை..!
என்றாவது ஒரு நாள் நீ
வருவாயென காத்திருக்கிறேன்..
அப்பா, அம்மா, அண்ணா என
அன்பாய் உள்ள இந்த கூட்டை
கலைக்க வருவாய் நிச்சயம்..
அழுகையும் கண்ணீருமாய் வழியனுப்ப..
காத்திருக்கும் கூட்டம் ..
இவர்களின் கண்ணீர் பிரிதல். சந்தோசமாய் !
இத்தனை வருட வழ்க்கையை தொலைத்து விட்டு
உன்னொடு உறவாட
உருவாக்கப்படு காத்திருக்கிறேன்...
எந்த எதிர்பார்ப்பும் இன்றி...
எதை எதை கேட்க போகிறாயோ
இதில் நான் என்ன பொருட்டு..
இருக்கும் வரை இயல்பாய்
நானாய் இருக்கிறேன் என்னொடு.. என்றும் வாழும் கனவுகளொடு..!
Subscribe to:
Comments (Atom)