Saturday, December 22, 2007

நட்பின் புரிதலை
உணர்ந்ததால் சொல்கிறேன்..சில..

'வெளி' உலகின் கூட்டத்தில்
உன்னின் சந்திப்பு ..
குறிப்பிடும்படியில்லை..
பேசிய வார்த்தைகள் எல்லாமே..
வெகுசாதாரனம் ..
நினைவில் கூட இல்லை..!

பர்க்காத பொழுதில்கூட
உன்னை நினைத்ததாய்..
சொல்வதிற்க்கில்லை..
ஆனலும் எதன் பொருட்டாவது..
நமது சந்திப்பு நிகழ்ந்தது..!

இதுதான் என முன்மொழிந்து
பேசவில்லை இயல்பாய்
வார்த்தைகள் விழுந்து
முகவரியை தேடிக் கொண்டன..
நாட்கள், மாதங்கள் நினைவாகிப் போனலும்..
சந்திக்கும் வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை..
இதுவரை.... !

ஆனாலும்..
உனது கண்களாலும்,
வார்த்தைகளாலும் காயம்பட்டதில்லை..நான்!
இதைவிட என்ன வேண்டும்... நமது நட்பைச் சொல்ல.....!

4 comments:

விக்னேஷ்வரி said...

எதுவும் எதிர்பாரா இயல்பான நட்பின் அழகும், ஆழமும் உங்கள் வரிகளில் தெரிகிறது

இனியாள் said...

Arputhamana kavithai ithu, natpin nanaithu thizhaikiren un varigalil.

இனியாள் said...

Sila ezhuththu pizhaigal uzhzhana kavaniththu thiruththungal.

இனியாள் said...

Sila ezhuththu pizhaigal uzhzhana kavaniththu thiruththungal.