
ஆயிரமாயிரம் வார்த்தைகள் சொல்லி..
அலங்கரித்த பொழுதில்
ஒருவரை ஒருவர் கை கோர்த்தோம்..
பூக்களின் வாசனையை
நுகர்ந்த வேகத்தில்
எதிர்பார்ப்புகளின் கெள்விக்குறி..
இருவரின் இடையில்...
நீ, நான் என தினம் போட்டியிட்டு
இருளின் கொடுமையில்
உறவுகளைப் புதிப்பித்து கொள்கிறோம்...
வியப்பாகவேயுள்ளது..
விடியும் பொழுது..
எத்தனை நாட்களுக்கு என.. ?
எது இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
இருவருக்குள்ளும்.. எப்போதோ
உண்மையாய் பறிமாறிக்கொண்ட..
அன்பின் ஈரம் இன்னும் மிச்சமிருக்கோ..
இருவருக்குள்ளும்...!
2 comments:
காதலின் எதார்த்தம்.
Nijamana kavithai, kathalil oori kidakkum thaampathyathai solli iruppathu arumai, ungal kavithai payanikira kazham arumaiyaga irukirathu, ezhuththu pizhaiyai thiruththungal.
Post a Comment