Friday, August 31, 2007

உனக்கென்று என்னிடம் என்ன இருகின்றது...

உனக்கென்று என்னிடம் என்ன இருகின்றது...

தேடி தேடி பார்த்த
விழிகளின் பதிவுகள்...
பார்த்து பார்த்து
பேசிய வார்த்தைகளின்
நிழல்கள்...
இன்னும் கோர்க்கப் படாமல் தொக்கி நிற்கும்
இந்த உறவின் பரிணாமங்கள்...
இவைகளையும் தவிர்த்து
உனக்கென்று என்னிடம் என்ன இருகின்றது...?
நிஜமான இன்றைய நாளினைத் தவிர....
...........

வார்த்தை பரிமாற்றங்கள்
நல் விசாரிப்புகள்
இருப்பிட விசாரணைகள்
தேங்கிய நினைவுகள்...
இவைகள் தவிர்த்து
என்னிடம் என்ன பேச
விழைகின்றாய்.....


அங்கீகாரமின்றி..
மனதிற்குள்ளே கருகி நிற்கும்
எண்ணங்களை.. உன்னிடம் பேச முடியுமா..?

யாருமற்ற வெளியில்
மொழியை மறந்து..
இயற்க்கையாய் பேச நினைப்பதை..
உன்னோடு பகிர்ந்துகொள்ள.. முடியுமா?

விருப்பமே உலகமாக
நட்பே.. கண்ணாடியாக..
கனவுகளும் கட்டியம் சொல்லுவதை..
உன்னிடம் சொல்ல முடியுமா...?

என எத்தனையோ..
கேள்விகளாய்.. நான்..
இதில் எதை உன்னுடன்
பேசப் போகிறேன்....
..
உருவமற்ற வார்த்தைகள்..
உரசிக்கொள்ளும்.. சருகுகளாக
சத்தமின்றி.....!

Sunday, August 26, 2007

வார்த்தைகளின்
வேகங்களில்
மனது.. காயம்படும்..

காயம்பட்ட மனது
மெளனமாக..
வார்த்தைகள்
தொலையும்...
உணர்வுகளின் மொழிகள்
விளக்கம் தேடும்..
விளக்கம் தேடும்
மொழிகள்.. உண்மையை
உணரும்..!

உண்மை
மனதைப் பக்குவப் படுத்தும்..
பக்குவப் படும் மனது..
வார்த்தைகளை பலப்படுத்தும்..
நட்பும் வளரும்..
நல்லவைகளும்.. நடக்கும்..!
நீ என்பதன்
மொழி... கனாக்காணும் வரை..
நான் என்னும் பலம்
உன்னைக் காணும் வரை..!

Monday, August 13, 2007

காலை...

காலை விழிகள் திறக்க
பதியும் உருவம்...
விழிகள் பாராமல்
பழகும் உருவம்...

விழிகள் பார்த்தவை
கலைந்து விடும்.. இரவுக்குள்
விழிகள் பாரா உருவம்...
மனம் பதிய
உனர்வாய் உருகும்..
உண்மையாய்..!